12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது தமிழக வரலாற்றில் இல்லாத ஒன்று. அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல்.

 ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகேயுள்ள பாரியூர் பகுதியில் சாக்கடை, தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அமைச்சரும், தற்போதைய கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.கே.ஏ.செங்கோட்டையன் இன்று துவக்கி வைத்தார்.
 பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு.கே.ஏ.செங்கோட்டையன்…

 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது தமிழக வரலாற்றில் இல்லாத ஒன்று.

 50 ஆயிரம் மாணவர்கள் ஏன் தேர்வு எழுதவில்லை என ஆய்வு செய்து, ஒரு ஆணையம் அமைத்து, சரியான விளக்கங்களை தெரிந்து, சட்டமன்றத்திலே அதற்கான விளக்கங்களை அரசு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments