தமிழகத்தில் இன்று முதல் துவங்கிய பிளஸ் 2 தேர்வு.


 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கியது.

 3 ஆயிரத்து 185 தேர்வு மையங்களில், 8 இலட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

   மாணவ, மாணவிகள் சிரமம் இன்றி தேர்வு எழுத தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளி கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

  இன்று நடைபெற்ற தேர்வானது சுலபமாக இருந்ததாக தேர்வு  எழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

 இந்த  12 ஆம் வகுப்பு தேர்வானது ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி முடிவடைகிறது.

 ஈரோட்டில் இன்று நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Post a Comment

0 Comments