ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற “ ஹிலாரியோ 23 “ கலைத்திறன் போட்டி.

 ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “ ஹிலாரியோ -23 “ என்ற பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்தது.

 இதில் தனிநடனம், மவுன நாடகம், குழு நடனம், சமையற்கலை போட்டி, தேவையற்ற பொருட்களில் இருந்து உபயோகமான பொருட்கள் தயாரித்தல், மெகந்தி, ரங்கோலி, முகவண்ணப்போட்டி, புகைப்படம், ஆடை அலங்கார வடிவமைப்பு போன்ற பல்வேறு போட்டிகள் மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் நடத்தப்பட்டன.


 இந்த போட்டிகளில் திருச்சி, கோவை, சேலம், நாமக்கல், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 167 கல்லூரிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 650 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

 இதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். செயலாளர் நந்தகுமார் பிரதீப், கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அறக்கட்டளை உறுப்பினர் ச.பானுமதி சண்முகன் குத்துவிளக்கு ஏற்றினார்.

 விழாவில் விஜய் டிவி. புகழ் வி.ஜே.பப்பு, பாலா, மணிமேகலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, அனைத்து போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்கள்.

 இப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி மாணவ - மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.

Post a Comment

0 Comments