கீழ் பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகளை தொடங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


  கீழ் பவானிக் கால்வாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டதால் அக்கால்வாயை சீரமைக்க கடந்த அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்து 2020 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.

  ஆனால் இதற்கு விவசாயிகளில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் இத்திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என குற்றம் சாட்டினர்.

  வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பயனில்லை. கீழ்பவானி கால்வாய் திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 இதில் கீழ் பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகளை 2023 மே 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று இன்று (31/03/2023) தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  இதற்கு ஆயக்கட்டு பாசன விவசாயிகள் அமைப்புகள் மகிச்சியோடு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments