தமிழகத்தில் உள்ள தெலுங்கு இன மக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட புதிய கட்சி.

 ஈரோட்டில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் மாநில தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.

  அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அக்கட்சியின் மாநில தலைவர் குணசேகரன்…

 தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழ் தேசியவாதிகள் 4ஆம் தர அரசியல் செய்து வருவதால், தமிழகத்தில் தெலுங்கு இன மக்கள் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

  இதனை முன்னாள், இந்நாள் அரசுக்கும், முதல்வர்கள், அமைச்சர்களுக்கும் தெரிவித்தும், உதாசனப்படுத்தியதால் தற்பொழுது ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் என்ற கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

 இந்த கட்சி முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள தெலுங்கு இன மக்களின் பாதுகாப்புக்காகவே தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

 மதுரையில் ஏப்ரல் 30ஆம் தேதி ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments