சேரன் கலை அறிவியல் கல்லூரியில் வர்த்தகம், மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் அதிகரித்திருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
மேலாண்மை துறை சார்பில் “வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், நபார்டு வங்கியின் முன்னாள் துணை இயக்குனர் திரு.அமலோற்பவநாதன், அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “சிறந்த வெற்றியாளர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்படும் நாம், முதலில் நம்மை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும். அது, நமது திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ள உந்துதலாக அமையும். தொழில் திறன்களை வளர்த்துக் கொள்ளும் போது, வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும் “ என்றார்.
அதோடு, கிராமப்புற மேம்பாடு, நிதி மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள், அரசு, அரசு சார்ந்த பொதுத்துறை போன்ற நிறுவனங்களில் பணியில் சேர்வது, அதற்கான போட்டித் தேர்வுகள் குறித்தும் மாணவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
மாணவர்களும், தங்களின் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், சேரன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் நந்தகோபால், கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் பூபதி, மேலாண்மைத் துறை தலைவர் டாக்டர் கவுசல்யாதேவி, வர்த்தக துறை தலைவர் டாக்டர் தேன்மொழிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
0 Comments