நான் போலீஸ் காவலில் இருந்து பேசியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. நான் மரணத்திற்கு பயப்படவில்லை – அம்ரித்பால்.

 
 மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் டி’. 

 இந்த அமைப்பின் தலைவராக 2021-ம் ஆண்டு அம்ரித் பால் சிங் தலைமையேற்றார். மேலும், அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 கடந்த சில தினங்களுக்கு முன்பு, அம்ரித் பால் சிங் பஞ்சாபுக்கு வந்து விரைவில் போலீஸில் சரண் அடைவார் என தகவல்கள் வந்துள்ளன என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  இந்நிலையில் காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் அம்ரித்பால் சிங், நான் பயப்படவில்லை எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

 அதில், சரணடைவதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்ததாக வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார். நான் போலீஸ் காவலில் இருந்து பேசியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

 மேலும் சீக்கியர்கள் அந்த கடவுளை சிறந்தவராக கருத வேண்டும். நான் மரணத்திற்கு பயப்படவில்லை. விரைவில் உங்கள் முன் வருவேன் எனவும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments