அந்தியூர் அருகே ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி எதிரில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த மாணவர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இன்று 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வு நடைபெற்று முடிந்தது.
தேர்வு முடிந்ததும், அந்தியூர் பகுதி சேர்ந்த சுகந்த் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் பவானிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அதேபோல் தொட்டியபாளையம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் மற்றும் பவானி பகுதியை சேர்ந்த தருண் ஆகிய இருவரும் அந்தியூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இவர்கள் வந்த இருசக்கர வாகனங்கள் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி அருகே வந்தபோது, நேருக்கு நேர் பலமாக மோதிக் கொண்டனர். இந்த விபத்தில் சுகந்த், கிருபாகரன், தருண் ஆகிய மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மோகன்ராஜுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் படி 4 மாணவர்களும் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த 3 மாணவர்களும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 Comments