ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளரும் (பொறுப்பு), பேராசிரியருமான முருகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெவ்வேறு துறைகளில் தங்கப் பதக்கங்களை வென்றவர்களுடன் தரவரிசையில் இடம் பெற்ற 51 மாணவர்கள் உட்பட மொத்தம் 1946 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் மனோகரன், நந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நிர்வாக அலுவலர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments