ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா “ரிதம் 2023” நிகழ்ச்சி நடைபெற்றது.


   ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா “ரிதம் 2023” நிகழ்ச்சி நடைபெற்றது.

 ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ரூட்ஸ் தொழில் நிறுவனத்தின் இயக்குநரும், சொல்லின் செல்வன் சிந்தனை கவிஞர் முனைவர் கவிதாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

  மேலும் மாணவர்களுடன் உரையாடி பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்து, அவர்களை உற்சாகப்படுத்தோடு, கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் தனக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களில் நூறு சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி பாராட்டினார்.

  இவ்விழாவில், கல்லூரி முதல்வர் முனைவர் என். ரெங்கராஜன், செயலர் திரு.எஸ். திருமூர்த்தி, அறக்கட்டளையின் செயலர் திரு.எஸ்.நந்தகுமார் பிரதீப், டாக்டர் எஸ்.ஆறுமுகம், நிர்வாக அதிகாரி ஏ.கே.வேலுசாமி, இயக்குனர் முனைவர் செந்தில், டிபென்ஸ் அகாடமியின் இயக்குனர் லெப்டினன்ட் காணல் சின்னசாமி ஜெயவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments