ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே கடந்த சில நாட்களாக புலிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையோரங்களில் புலியை கண்டு போட்டோவும் எடுத்தனர்.
இந்நிலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றது. அந்த சாலைகளில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகனங்களில் செல்வோர் தங்கள் பாதுகாப்பு கருதி, வழியில் எங்கும் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments