காஞ்சிகோவில் ஸ்ரீ கனககிரி வேலாயுதசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.


  ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயிலில் உள்ள ஸ்ரீ கனககிரி வேலாயுதசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


  கும்பாபிஷேகத்திற்காக காசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், தலைக்காவேரி, பவானி உள்ளிட்ட இடங்களில் இருந்து தீர்த்தங்கள் எடுத்துவரப்பட்டு, அதனை பல்லாயிரக்கணக்க பக்தர்கள் மூலம் காஞ்சி கோவில் 4 வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துவந்து, கோவில் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகா கணபதி ஹோமமும், காஞ்சிக்கோயில் ஈசான சிவப்பிரகாச சிவாச்சாரியார் குருக்கள் தலைமையில் வேள்வி யாகங்களும் நடைபெற்றன.


 அனைத்தொடர்ந்து சிவகிரி ஆதீன குலகுரு தலைமையில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Post a Comment

0 Comments