காதலர்கள் குடியிருப்பு என்ற தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு குறும்படத்தின் பட பூஜை நடைபெற்றது.

 நாளுக்கு நாள் பல்வேறு காரணங்களால் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது.

 இதனை தடுக்கும் வகையில், தற்கொலை தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை கதைக்களமாக கொண்ட, மொடக்குறிச்சியை சேர்ந்த பிரபல செய்தியாளரும் சமூக ஆர்வலருமான அப்பாஸ் அவர்கள் எழுதிய கதையை, காதலர்கள் குடியிருப்பு என்ற பெயரில் குறும்படமாக எடுக்க உள்ளனர்.

    இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 1 ந்தேதி தொடங்க உள்ள நிலையில், பட பூஜையானது ஏப்ரல் 14ஆம் தேதியான இன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நடைபெற்றது.


  இதில் முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி கலந்து கொண்டு குத்துவிளக்கேத்தி பட பூஜையை துவக்கி வைத்தார்.

  இந்நிகழ்ச்சியில் கொடுமுடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பரமசிவம், குளூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்வராஜ், பூந்துறை சேமூர் ஊராட்சி மன்ற தலைவர் தங்க தமிழ்ச்செல்வன், ரெயின்போ கணபதி, பிரகாஷ், குறிஞ்சி சந்திரசேகரன், சிவகிரி தனசேகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

  இந்த குறும்படத்தின் கதையை எழுதி, இயக்கி, அப்பாஸ் அவர்களே தயாரிக்கவும் உள்ளார். முபாரக் அலி ஒளிப்பதிவு செய்கிறார். குறும்படத்தில் ஜுபைர் அகமது, மஞ்சள் மாரிமுத்து, செந்தாமரை, ஷோபனா, செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

Post a Comment

0 Comments