ஈரோட்டில் கொரோனாவை தடுக்க கபசுர குடிநீர் விநியோகம்.

 
  கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஈரோட்டில் சூளை உள்ளியிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது.

 கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை தடுக்க அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

  இந்நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பிலும், ஈரோடு மாநகராட்சி மண்டலம் இரண்டின் சார்பிலும் ஈரோடு சூளை அருகேயுள்ள ஈபிபி நகர் 12 வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இன்று காலை முதல் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனை 12 வது வார் மாமன்ற உறுப்பினர் ஜெகதீஸ் துவக்கி வைத்தார்.

 மேலும் பொதுமக்கள் தங்கள் உடலில் சலி, காட்சல், உடல் சோர்வு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments