சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க நினைத்த கல்லூரி மாணவனின் ஓர் சாதனை பயணம்!

  பல்லடம், அருள்புரத்தை சேர்ந்தவர் நவீன்குமார். இவர் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் துறையில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

 சுற்றுச்சூழல் மாசடைவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இயற்கையை காக்க வேண்டும் என நினைத்த இவர், தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

  கடந்த பிப்.5-ம் தேதி பல்லடத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய இவர், ஓசூர், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர் என 12 மாநிலங்களைக் கடந்து, சுமார் 4,800 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து இந்திய மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

 நவீன்குமாரின் இத்தகைய சாதனையைப் பாராட்டிய சேரன் கல்லூரி நிர்வாகம், அவரை மென்மேலும் ஊக்குப்படுத்தும் வகையில், கல்லூரியின் துணைமுதல்வர் கெளசல்யா தேவி, விசுவல் கம்யூனிகேஷன் துறைத்தலைவர் ஆனந்தபாபு ஆகியோர் தலைமையில் பாராட்டு விழா நடத்தி ஊக்கப்படுத்தியது.


 இதுகுறித்து நவீன்குமார் கூறுகையில்…
 “லடாக் பயணத்திட்டம் குறித்துப் பெற்றோரிடம் கூறியபோது முதலில் அனுமதிக்கவில்லை. பின் எனது லட்சியத்தை அடைய உறுதுணையாக இருந்தனர். எனது 78 நாள் பயணத்தில், பல்வேறு மாநிலங்களில் பலதரப்பட்ட மக்கள், மொழிப் பிரச்சனை, உணவு எனச் சந்தித்த இடர்பாடுகள் அதிகம்.

 அதிலும், கார்கில் பகுதியிலிருந்து கர்துங் லா வரை செல்லும் சாலையில் கடைகள் எதுவும் இல்லை. தண்ணீர் கூட இல்ல. பனிக்கட்டிகளை நெருப்பில் உருக்கி தண்ணீர் குடித்தேன். எனது பயணத்தில் போது கல்லூரி நிர்வாகம், நண்பர்களின் ஒத்துழைப்பு, மக்களின் ஆதரவு என்னை மேலும் ஊக்குவித்தது” என்றார்.

 சாதிக்க துடிக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு, நவீன் குமாரின் சாதனை, ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments