பவானியில் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் பயன்படுத்திய பொது பாதை ஆக்கிரமிப்பு. மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் மனு.

  பவானி அருகே உள்ள கண்ணாடி பாளையத்தில் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி கிராம மக்கள் கோபி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

 பவானி அருகே உள்ள கண்ணாடிபாளையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்ததால் கிராம மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

 இதனால் பொது பாதையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பவானி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற முன் வராத நிலையில் தொடர்ந்து கிராம மக்கள் மனு அளித்து வந்தனர்.
 இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் நில அளவையர்கள் எவ்வித முன் அறிவிப்பும் செய்யாமலும், கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்காமலும்,கிராம மக்கள் கூலி வேலைக்கு சென்ற பின்னர், பிரச்சினைக்கு உரிய பொது பாதையை பெயரளவிற்கு அளவீடு செய்து உள்ளனர்.
 இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள பொது பாதையை உரிய அதிகாரிகள், கிராம மக்கள் முன்னிலையில் அளவீடு செய்து, பாதையை மீட்டு தர வலியுறுத்தி கோபி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

Post a Comment

0 Comments