ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் நிலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை விரைந்து செயல்படுத்த இந்து முன்னணி வலியுறுத்தல்.


 ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியில் இந்து முன்னணியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் திரு பா. ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

  இக்கூட்டத்தில் இந்து முன்னணியின் மாநில தலைவர் திரு.காடேஸ்வரா சி சுப்பிரமணியம், மாநில பொதுச் செயலாளர் திரு.கிஷோர் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 இதில் ஆக்கிரமிப்பில் உள்ள ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் நிலம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விரைந்து செயல்படுத்த வேண்டும்,

 ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும்,

 மேலும் பொதுமக்களுக்கு 80 அடி திட்ட சாலையை திறந்து விட வேண்டும்,

 பங்குனி உத்திரம் வருவதால் கோவில்களில் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்,

  உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


 இந்த கூட்டத்தில் ஈரோடு மாநகர, மாவட்ட, நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் .

Post a Comment

0 Comments