கண்களை கட்டிக்கொண்டு படிப்பதும், ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதியதும் என வியப்பில் ஆழ்த்திய பள்ளி குழந்தைகள்.

  ஈரோட்டில் உள்ள டிவைன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 37 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கருங்கல்பாளையம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.சந்திரசேகர், சிங்கப்பூர் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் “சொற்சித்தர்” மெய்ஞானச்செல்வர், புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சியில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.


  இதில் குழந்தைகள் கண்களை கட்டிக்கொண்டு படிப்பதும், மிதிவண்டி ஓட்டுவதும், சதுரங்கம் விளையாடியதும், ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதியதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


  இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சுந்தரமூர்த்தி, சண்முக காந்தி உட்பட மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments