பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா. குண்டத்தில் இறங்க இன்று முதலே காத்திருக்கும் பக்தர்கள்.


 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவிலானது தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற கோயில் ஆகும்.

 இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழாவானது மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 20ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  திருவிழாவின் முக்கிய நிகழ்வான பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் இறங்கும் விழா நாளை அதிகாலை 4 மணியளவில் நடக்கிறது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு குண்டத்தில் இறங்கி, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

 
  குண்டம் இறங்க உள்ள பக்தர்கள் இன்று காலை முதல் கோவில் வளாகத்தில் குவிந்து வருகின்றனர். கோடைகாலத்தின் காரணமாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் தங்குவதற்காக கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

Post a Comment

0 Comments