அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களில் உள்ள பெயர் பலகையில் கட்டாயம் தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்பது வலியுறுத்தி துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாநகர பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ராஜ் தலைமையில் ஈரோடு மார்கெட்டின் முக்கிய பகுதியான ஈஸ்வரன் கோவில், பிருந்தா வீதி, அனுமந்தராயன் கோவில் வீதி, மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், தமிழில் பெயர் பலகை வைக்கக் கோரி பாமகவினர் துண்டு அறிக்கையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் எஸ் எல், பரமசிவம், மாவட்டத் தலைவர் பிரபு, இளைஞர் சங்க தலைவர் தினேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் முனியப்பன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ரங்கன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
0 Comments