ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடக்குப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 9 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பாஜகவின் ஈரோடு மாவட்ட இளைஞர் அணி தலைவர் அரவிந்த் சாகர் ஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா ஜி கலந்து கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறினார்.
இக்கூட்டத்தில் 8வது வார்டு கவுன்சிலர் உமா கார்த்திகேயன், சத்தியமங்கலம் நகர பாஜக தலைவர் செல்வராஜ் மற்றும் பரத் உட்பட 300க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா ஜி...
தமிழ்நாட்டில் 2024 மற்றும் 2026 இல் தாமரை மலரும். ஆளுநர் எந்த மசோதனையும் ஒத்துழைக்கவில்லை என்று கூறுகின்றனர். கவர்னர் சொன்னவுடன் கையெழுத்து போட அடிமை கிடையாது. சில விஷயங்கள் தீராத வரைக்கும் கையெழுத்து போட இயலாது.
2024 நடக்கும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர்களுக்கு முக்கியமாக வாய்ப்பு அளிக்கப்படும். மாநில தலைவர் அண்ணாமலைக்கு 37 வயது தான் ஆகின்றது. திறமை இருந்தால் எங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இளைஞர்கள் போட்டியிடலாம் என தெரிவித்தார்.
மேலும் அதிமுகவுடன் கூட்டணி நன்றாக உள்ளது. திமுக என்ற தீய கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரு குறிக்கோளிடம் உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
0 Comments