கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்.


 கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


 தமிழக விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த ரவி, செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


 ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி...

  கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர்.

  கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கடந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments