கராத்தே போட்டியில் தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்கள்.

 சென்னையில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் 39 வது மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

 இதில் ஈரோடு மாவட்ட அணி சார்பில், ஜென் கராத்தே பள்ளி சார்பில், வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வயது மற்றும் எடையின் அடிப்படையில் குமித்தே எனப்படும் சண்டை பிரிவில் கலந்து கொண்டனர்.

 இதில் மாணவி K.கலைவாணி அவர்கள் தங்கப்பதக்கமும் மாணவர் S.L அமுதன் அவர்கள் வெண்கல பதக்கமும் வென்று, ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.

 இதனை அடுத்து தமிழ்நாடு கராத்தே சங்க தலைவர் திரு.ஜேக்கப் தேவகுமார், செயலாளர் திரு.அல்தாஃப் ஆலம், ஜென் கராத்தே பள்ளி தலைவர் திரு.கார்த்திகேயன், பயிற்சியாளர்கள் திரு.தர்ஷன் தயானந்த், திரு.குமரேசன், திரு.பரமேஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

 இதில் கலைவாணி அவர்கள் சென்ற வருடமும் ஈரோடு மாவட்ட அணி சார்பில் மாநில போட்டியில் கலந்துகொண்டு, தங்கப்பதக்கம் வென்று, ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments