கீழ்பவானி பாசன கால்வாயை நீதிமன்ற உத்தரவின்படி சீரமைக்க வலியுறுத்தி ஈரோட்டில் விவசாயிகள் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வாபஸ்.

 ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள கீழ்பவானி பாசன வாய்க்காலை, உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க, தமிழக அரசாணையின்படி சீரமைக்க கோரி, கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் துணைத் தலைவர் ராமசாமி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று ஈரோடு நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதில் திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 இதனையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கீழ் பவானி பாசன வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Post a Comment

0 Comments