ஈரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை.


 ஈரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும், டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் சப்ளை செய்யும் காண்ட்ராக்டருமான டிரான்ஸ்போர்ட் அதிபர் சச்சிதானந்தம் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 தமிழக மதுவிலக்கு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அதன் ஒரு பகுதியாக ஈரோடு திண்டலில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பரும், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் சப்ளை செய்யும் காண்ட்ராக்டருமான, டிரான்ஸ்போர்ட் அதிபர் சச்சிதானந்தம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 KSM டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை இயங்கி வரும் இவரது வீட்டில் கேளரா, தமிழகத்தைச் சேர்ந்த 8 வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


 சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments