ஈரோட்டில் சக்திதேவி அறக்கட்டளை சார்பில் இலவச கோடைகால பயிற்சி.

 சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளையின் சார்பில் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் ஆண்டு இலவச கோடைகால பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

சக்திதேவி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் பி.சி.துரைசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான பயிற்சியை தொடங்கிவைத்தார்.

 பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசுதாபேகம் மாணவிகளுக்கான கோடைகால தொழிற்பயிற்சி மெஹந்தி மற்றும் எம்ப்ராயிடிங் பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

 இத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 250 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இந்த இலவச பயிற்சியில் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் மற்றும் பயிற்சி உபகரணங்களும் வழங்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் சக்திதேவி அறக்கட்டளையின் வழிகாட்டி திட்ட ஆலோசகர் ராஜமாணிக்கம், வழிகாட்டி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், பெருந்துறை நகர பிரமுகர்கள் சென்னியப்பன், பல்லவி பரமசிவம் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments