கொடிவேரி அணையில் குவியும் ஏராளமான சுற்றுலா பயணிகள்.

 
 ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு கொடிவேரி அணை என்று அழைக்கப்படுகிறது.

 இந்த தடுப்பணையில் இருந்து அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
 தற்பொழுது கோடை வெயில் வாட்டி வருவதாலும், கோடை விடுமுறை காரணமாகவும் கொடிவேரி அணையில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

 மேலும் அங்குள்ள பரிசலில் பயணம் மேற்கொண்டும், பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடியும் மகிழ்ந்ததுடன், தாங்கள் கொண்டு வந்த உணவுகளை உண்டும், அருகில் உள்ள கடைகளில் விற்கப்படும் பொறித்த மீன்களை வாங்கி உண்டும், சுற்றுலா பயணிகள் தங்கள் பொழுதை குடும்பத்துடன் கழித்து வருகின்றனர்.

  சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அசம்பாவிதங்களை தடுக்க நீர்வளத் துறை சார்பில் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து வருவதோடு, பங்களாபுதூர், கடத்தூர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments