உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பெருந்துறை சிப்காட் பிராசசிங் அசோசியேசன் சார்பில் தமிழக முதலமைச்சரின் சிறப்பான திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் உதயக்குமார், மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதன்மூலம் மஞ்சப் பையை மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டது.
முன்னதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சிறப்பாக செயல்பட்ட அறக்கட்டளைகளை பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.
0 Comments