ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் அதிக வெயிலின் காரணமாக நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த கார்.

 திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் ராஜலிங்கம், அதே பகுதியில் இரும்பு கடை தொழில் நடத்தி வரும் இவர் அவிநாசியில் இருந்து இன்று காலை பெருந்துறைக்கு தனது உயர் ரக காரில் புறப்பட்டு வந்தார்.

  ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிக வெயில் கொளுத்திய நிலையில், செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விஜயமங்கலம் டோல்கேட்டை கடக்க முயற்சித்த போது ராஜலிங்கம் காரில் இருந்து திடீரென புகை வெளியேறி உள்ளது. காரில் இருந்து வேகமாக வெளியேறிய புகை திடீரென தீயாக மாறி கார் முழுவதும் வேகமாக பற்றி எரிய தொடங்கியது.


  இதனை அடுத்து ராஜலிங்கம் உடனடியாக காரை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகே இருந்த டோல்கேட் நிர்வாகத்தினர் பெருந்துறை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கிரேன் உதவியுடன் சேதம் அடைந்த காரை அப்புறப்படுத்தினர்.

 இதில் கார் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் சுமார் 15 லட்சம் மதிப்பிலான காரானது முழுவதும் சேதம் அடைந்தது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சுங்கச்சாவடியில் கார் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Post a Comment

0 Comments