முதலமைச்சரைப் பற்றி பேசுவதற்கு தமிழ்நாடு ஆளுநருக்கு அருகதை கிடையாது. மூன்றாம் தர பேச்சாளராக ஆளுனர் உள்ளார் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் விமர்சனம்.


 ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் நகர்புற நலவாழ்வு மையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்...
 ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமரே ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

 கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட வேண்டும் என்று சிவக்குமார் சொல்லியிருக்கின்றார். அவருக்கு தகுந்த பதிலை துரைமுருகன் சொல்லி இருக்கிறார். தமிழ்நாடு காங்கிரசை பொருத்தவரை மேகதாது கட்டப்படுவதை கடைசி வரை முழுமையாக நாங்கள் எதிர்ப்போம் என்றார்.

 தொடர்ந்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், முதலமைச்சரைப் பற்றி பேசுவதற்கு தமிழ்நாடு ஆளுநருக்கு அருகதை கிடையாது என்றும் மூன்றாம் தர பேச்சாளராக ஆளுனர் உள்ளார் என்றார்.

Post a Comment

0 Comments