பள்ளி சீருடை மற்றும் இலவச வேட்டி, சேலைக்கான 50 கோடி ரூபாய் கூலி நிலுவைத் தொகையை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

 
 ஈரோட்டில் தமிழ்நாடு தொடக்க கைத்தறி விசைத்தறி நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

 சங்கத்தின் முன்னாள் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த கைத்தறி மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

 கூட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள நெசவாளர் சங்கங்களை காப்பாற்ற 2022 - 23 கல்வியாண்டில் நெசவாளர்கள் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பள்ளி சீருடைக்கான நிலுவைத் தொகை மற்றும், இலவச வேட்டி, சேலைக்கான கூலி நிலுவைத் தொகை என நிலுவையில் உள்ள சுமார் 50 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும், இந்த ஆண்டிற்கான இலவச வேட்டி சேலை உற்பத்தியை தொடங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments