தமிழகத்தில் கணினி மயமாக்கப்படும் டாஸ்மாக் கடைகள்

  ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 இடங்களில் 16.67 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சருமான சு.முத்துசாமி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

 

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி

 மதுரை மாநாட்டில், மதுவிலக்கு துறையில் தினமும் 10 கோடிக்கு ஊழல் நடந்துகொண்டிருக்கிறது என்ற எடப்பாடி பழனிச்சாமி கூறிய குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த அவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை பற்றி பேசுவதாக கூறினார்.

 மேலும் இரண்டு மாதங்களில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினி மயமாக்கும் பணிகள் நிறைவு பெறவுள்ளதால், அதன் மூலம் மதுபானம் விற்பனை அனைத்தும் எளிதில் கண்காணிக்க முடியும் என தெரிவித்த அவர், தமிழகத்தில் 500 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. மக்களின் புகார் மற்றும் பள்ளிக்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த கடைகள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர, புதிதாக எங்கும் கடைகள் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுபான பார்கள் ஒரு இடத்தில் கூட இல்லை என்றும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 தற்போது டாஸ்மாக் கடைகளில், பணியாளர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சீனியார்டி அடிப்படையில் 2000 நபர்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளது.  டாஸ்மாக் தொழிலாளர்கள் கொடுத்த 49 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், ஊதிய பேச்சுவார்த்தை என்பது நிதி துறை உள்பட மற்ற துறைகளையும் ஒப்பிட்டு செய்யவேண்டிய பணி என்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 இதன் மூலம் டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது, போலி மதுபான விற்பனை ஆகியவற்றை தடுக்கமுடியும் என்ன நம்பப்படுகிறது.

 மேலும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்

 அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 1045 குளங்களில் 920 குளங்களுக்கு சோதனையோட்டம் முடிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மீதமுள்ள குளங்களுக்கு சோதனையோட்டம் செய்யமுடியவில்லை என்றார்.

Post a Comment

0 Comments