ஈரோட்டில் நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' யாத்திரை.

  ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள தொட்டிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய ஜல்சக்தி மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் விஷ்வேஷ்வர் துடூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 இந்நிகழ்வில் மருத்துவத் துறை, மகளிர் சுய உதவி குழுவினர், வேளாண் ஆராய்ச்சி மையம், இந்தியன் ஆயில் நிறுவனம், கனரா வங்கி சார்பில் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை பார்வையிட்ட அமைச்சர், பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் அரங்கினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
 
  பின்னர் நபார்டு வங்கி விவசாயிகளுக்கு விவசாயக் கடன் அட்டை, மாவட்ட முன்னோடி வங்கிகள் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி , வேளாண்மை துறை விவசாயிகளுக்கு மண்வள அட்டை, சுகாதாரத் துறை PMAY அட்டை, எரிபொருள் நிறுவனம் இலவச எவாயிவு இணைப்பு, தொழிலாளர் நலன் துறை தொழிலாளர் நல அட்டை, அங்கன்வாடி மையத்திற்கு காய்கறி நாற்றுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு மகளிர்களுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.
  
  நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் விஷ்வேஷ்வர் துடூ...

 நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய அரசின் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். ஆனால் மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. அவர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

  மத்திய அரசு நிதி அனைத்து திட்டங்களிலும் 60% சதவீதமும், மாநில அரசு நிதி 40 சதவீத பங்களிப்பும் உள்ளது. எனவே மத்திய மாநில அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஆவாஸ் யோஜனா பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு நிதி 60 சதவீதமும், மாநில அரசு நிதி 40 சதவீதமும் வழங்கப்படுகிறது. ஆனால் இது மத்திய அரசின் திட்டமென மாநில அரசு சொல்வதில்லை.

 2024 ஆம் ஆண்டிற்குள் அணைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என பிரதமர் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்திற்கு மத்திய அரசில் இருந்து 100% நிதி மாநில அரசுக்கு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் மாநில அரசு அதிகாரிகள் பயனளியிடம் பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டு வருகின்றனர். இது மிகவும் வருத்தத்துக்குரிய செயல் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments